ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தை விசாரிக்க குழு அமைக்கப்படும்-மு.க.ஸ்டாலின்


ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தை விசாரிக்க குழு அமைக்கப்படும்-மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 3 April 2017 7:16 AM GMT (Updated: 3 April 2017 7:16 AM GMT)

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தை விசாரிக்க குழு அமைக்கப்படும் என மு.க ஸ்டாலின் கூறினார்.

சென்னை

ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி  திருவெற்றியூரில் வணிகர்கள், மீனவர்களுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது கூட்டத்தில் பேசிய மு.க ஸ்டாலின் பேசியதாவது:-


திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்படும்.ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தை விசாரிக்க குழு அமைக்கப்படும். முதலமைச்சர் பதவியை காப்பாற்றி கொள்ளவே ஓபிஎஸ் முயன்றார், மக்களை பற்றி கவலைப்படவில்லை.ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு தீர்வுகண்டவர்கள் மாணவர்கள், இளைஞர்கள்தான்.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story