போலீஸ் சப்–இன்ஸ்பெக்டராக பொறுப்பு ஏற்றுள்ள திருநங்கைக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து


போலீஸ் சப்–இன்ஸ்பெக்டராக பொறுப்பு ஏற்றுள்ள திருநங்கைக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 3 April 2017 5:45 PM GMT (Updated: 3 April 2017 1:04 PM GMT)

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது இணையதள முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:–

சென்னை,

தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி முடிந்து தர்மபுரி மாவட்டத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் சேலத்து திருநங்கை பிரித்திகா யாசினிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தமிழக மக்களை பாதுகாக்க அந்த பணியில் அவர் சிறப்பாக செயல்பட்டு சாதனைகள் பல படைக்க வேண்டும் என்பதே திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக ஆக்கப்பூர்வமான திட்டங்களை நிறைவேற்றி அரும்பாடுபட்ட தி.மு.க.வின் விருப்பம் ஆகும்.

சேலத்து திருநங்கை போல் திருநங்கைகள் அனைவரும் தங்கள் எதிர்காலத்தை மிகுந்த தன்னம்பிக்கையுடன் சந்தித்து வெற்றி மேல் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story