அதிக ரெயில்பெட்டிகள் தயாரித்து பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை சாதனை


அதிக ரெயில்பெட்டிகள் தயாரித்து பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை சாதனை
x
தினத்தந்தி 4 April 2017 2:48 AM IST (Updated: 4 April 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்) கடந்த 1955-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் நேருவால் தொடங்கப்பட்டது. 11,500 பேர் பணியாற்றி வருகிறார்கள்.

பெரம்பூர்,

உலகத்தரம் வாய்ந்த ரெயில்பெட்டிகள் உள்பட 54 வகையான ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த தொழிற்சாலையில் கடந்த 2015-16-ம் ஆண்டில் 2,005 ரெயில் பெட்டிகள் தயாரிக் கப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு (2016-17) 2,227 ரெயில் பெட்டிகள் தயாரித்து இந்தியாவிலேயே அதிக ரெயில் பெட்டிகள் தயாரித்த தொழிற்சாலை என்ற பெயரை பெற்று சாதனை படைத்து உள்ளது.

மேற்கண்ட தகவல்கள் பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Next Story