நடுவண் அரசா? நயவஞ்சக அரசா? நரேந்திர மோடி அரசு மீது அ.தி.மு.க. நாளிதழ் கடும் பாய்ச்சல்
நடுவண் அரசா? நயவஞ்சக அரசா? என நரேந்திர மோடி அரசு மீது அ.தி.மு.க. நாளிதழ் கடும் சாடி உள்ளது.
சென்னை,
அ.தி.மு.கவின் எடப்பாடி ஓ.பன்னீர் செல்வம் இரு அணிகளும் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டாலும் தினகரனுக்கு ஆதரவாக இயங்கும்
அ.தி.மு.க. நாளேட்டில் மோடி அரசின் மூன்றாண்டு சாதனையை சித்ரகுப்தன் என்ற பெயரில் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
மோடி அரசின் மூன்றாண்டு.
இது- நாடு காக்கும் அரசா?
மாடு காக்கும் அரசா?
இது- சாதனை அரசா?
சி.பி.ஐ. சோதனை அரசா?
டிஜிட்டல் இந்தியா....
மேக் இன் இந்தியா...
கிளீன் இந்தியா... என
வாயாலே வடைசுடும் அரசா?
வாக்களித்த மக்களுக்கு
விடை சொல்லும் அரசா?
சகலரும் வாழ்த்தும் அரசா?
சமஸ்கிருதம் வளர்க்கும் அரசா?
கண்ணீர் துடைக்கும் அரசா?
காந்தி தேசத்தை கார்ப்பரேட்டுகளுக்கு படைக்கும் அரசா?
கருப்பு பணத்தை ஒழித்த அரசா?
கரன்சியை காகிதமாக்கி கஷ்டங்களை விதைத்த அரசா?
ஆண்டுக்கு பதினைந்து லட்சம் பேருக்கு வேலை...
ஆளுக்கு பதினைந்து லட்சம் ரூபாய்.. என வாக்குறுதி காத்த அரசா?
வாய்ஜாலத்தில் ஏய்த்த அரசா?
பதஞ்சலி, பகவத் கீதைக்கு பல்லக்கு தூக்கும் அரசா?
பாரதத்தின் பன்முக தன்மையை போக்கும் அரசா?
மம்தா உயிருக்கு பதினோரு லட்சம்...
பினராய் விஜய் தலைக்கு ஒரு கோடி என்றெல்லாம்
ஆன்டி-இந்தியன் பழி போட்டு ஆணவம் மமதையில் அலைகிற அரசா?
ஐநூறு ராணுவத்தினர் உயிரிழக்க அடிகோலிய ‘அநாவசிய போர்’ அரசா?
விலைவாசியை குறைத்த அரசா?
வெட்டிப் பேச்சில் திளைத்த அரசா?
ஜி.எஸ்.டி. வரியால் வருமானம் இழப்பு...
‘நீட்’ தேர்வால் வருங்காலத் தலைமுறைக்கு வாய்ப்புகள் இழப்பு...
ஹைட்ரோ கார்பனால் வாழ்வாதாரம் இழப்பு...
எய்ம்ஸ் தாமதம் உட்பட ஏராள மறுப்பு...
வடபுலத்தை வாழ்விக்க வளர்தமிழ் பூமியை வஞ்சித்தால்
இது- நடுவண் அரசா? நயவஞ்சக அரசா?
எப்படியோ, மூச்சுமுட்ட பேசியே மூன்றாண்டு போச்சு. ஆனாலும், எந்திர, தந்திர, மந்திரத்தை நம்பியே எகத்தாளத்தில் நடக்குது தாமரையின் வீச்சு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story