தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடம் அனுமதி இன்றி கட்டப்பட்டது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்


தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடம் அனுமதி இன்றி கட்டப்பட்டது  அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 1 Jun 2017 1:25 PM IST (Updated: 1 Jun 2017 1:25 PM IST)
t-max-icont-min-icon

தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடம் அனுமதி இன்றி கட்டப்பட்டது என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

தீ விபத்திற்குள்ளான கட்டிடம் வீதிமீறலால் 2011-ல் சிஎம்டிஏ அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.தீவிபத்து ஏற்பட்ட கட்டிடம் அனுமதி இன்றி கட்டப்பட்டது என சிஎம்டிஏ சார்பில் .நாளேடுகளில் விளம்பரம் செய்யப்பட்டது.கட்டிட நிறைவு சான்றிதழை சென்னை சில்க்ஸ்  அரசிடம் பெறவில்லை.

அவர்கள் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று தொடர்ந்து கடையை நடத்தி வந்தனர். விதிமீறல் கட்டிடங்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கட்டிடங்கள் இருக்கக்கூடாது.

தி.நகர் கட்டிட விதிமீறல் பிரச்சினை 20 ஆண்டுகளாக உள்ளது.

தியாகராய நகரில் உள்ள கட்டிடங்களை வரைமுறைபடுத்த நடவடிக்கை.4 அடுக்கு மாடிக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், 8 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.முதல் அமைச்சருடன் ஆலோசனை நடத்தி விதிமுறை மீறிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story