ராகுல்காந்தி நாளை சென்னை வருகிறார் கருணாநிதியின் சட்டசபை வைரவிழாவில் கலந்துகொள்கிறார்


ராகுல்காந்தி நாளை சென்னை வருகிறார் கருணாநிதியின் சட்டசபை வைரவிழாவில் கலந்துகொள்கிறார்
x
தினத்தந்தி 2 Jun 2017 12:15 AM IST (Updated: 1 Jun 2017 11:00 PM IST)
t-max-icont-min-icon

சென்னை தியாகராயநகரில் தீப்பிடித்து எரிந்த சென்னை சில்க்ஸ் கடையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று பிற்பகல் பார்வையிட்டார்.

சென்னை,

சென்னை தியாகராயநகரில் தீப்பிடித்து எரிந்த சென்னை சில்க்ஸ் கடையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று பிற்பகல் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் நடந்த தீ விபத்துக்கு யார் காரணமாக இருந்தாலும் சரி, தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கவேண்டும். எதிர்காலத்தில் இதுபோல ஒரு சம்பவம் நடக்காத வகையில் நடவடிக்கை தீவிரமாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பெரிய கட்டிடமும் விதிமீறல் மீறி கட்டப்பட்டு இருக்கிறதா? என்பதை சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் குழு ஆய்வு செய்யவேண்டும்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டசபை வைரவிழாவில், அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவரான ராகுல்காந்தி பங்கேற்க உள்ளார். இதற்காக 3–ந்தேதி (நாளை) பிற்பகலில் அவர் சென்னைக்கு விமானம் மூலம் வருகிறார். பின்னர் விழாவில் பங்கேற்கிறார். மறுநாளான 4–ந்தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். அன்றைய தினம் மாலையில் அவர் டெல்லி செல்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

Next Story