வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியுமா? தேர்தல் கமிஷனின் சவாலை தமிழக கட்சிகள் ஏற்கவில்லை
உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்ததாக பகுஜன் சமாஜ் உள்பட பல கட்சிகள் புகார் கூறின.
சென்னை,
உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்ததாக பகுஜன் சமாஜ் உள்பட பல கட்சிகள் புகார் கூறின. இதை இந்திய தேர்தல் கமிஷன் மறுத்ததோடு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகளை செய்ய முடியுமா? என்பதை நிரூபிக்க அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் கமிஷன் சவால் விடுத்தது.
அதன் பின்னர் நாட்டில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளுக்கும் இந்திய தேர்தல் கமிஷன் அழைப்புக் கடிதம் அனுப்பியது. அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளுக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி மூலம் அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கடிதம் அனுப்பினார்.
அதில், ‘‘மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்ற சவாலை ஏற்று அதை நிரூபிக்க வேண்டும் என்றால் மே 26–ந்தேதி மாலை 5 மணிக்குள் இந்திய தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் பெயர் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்கிற கட்சிக்கு ஜூன் 3–ந்தேதியன்று டெல்லியில் தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் வாய்ப்பு அளிக்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் இருந்து எந்த கட்சியும் சவாலை ஏற்று பெயர் பதிவு செய்யவில்லை’’ என்று தெரிவித்தார்.

Related Tags :
Next Story