பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்து வருகின்றது.
சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்து வருகின்றது. அதன் அடிப்படையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தமிழகத்தில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.23 பைசாவும், டீசல் விலையை லிட்டருக்கு 89 பைசாவும் உயர்த்தியுள்ளது.
இந்த விலை உயர்வினால் பெரிதும் பாதிக்கப்படுவது அன்றாடம் டீசல் மற்றும் பெட்ரோல் பயன்படுத்தும் ஏழை, எளிய, சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் தான். எனவே, மத்திய பா.ஜ.க. அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கிய உரிமையை உடனடியாக ரத்து செய்து, மத்திய அரசே பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் நிலைத்த தன்மையை கொண்டுவர வேண்டும். மேலும் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரத்து செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story