மாட்டு இறைச்சிக்கு எதிரான சட்டம் ஜனநாயகத்துக்கு விரோதமானது பிரகாஷ் காரத் பேட்டி
மாட்டு இறைச்சிக்கு எதிரான சட்டம் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று கோவையில் பிரகாஷ் காரத் கூறினார்.
கோவை,
கோவையில் நேற்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனநாயகத்துக்கு விரோதமானது
மாட்டு இறைச்சிக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம் ஜனநாயகத்துக்கு விரோதமானது. அது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயல். இந்த அறிவிப்பை பின்வாங்க செய்ய எங்கள் கட்சி தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலோசனை செய்ய வேண்டும். இல்லை என்றால் ஆளும்கட்சியின் முடிவை பொறுத்து நாங்கள் முடிவை அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கண்டிக்கத்தக்கது
பல்வேறு பிரச்சினைகள் இருக்க சிறுபான்மையினருக்கு எதிராக சில அமைப்புகளை திருப்திபடுத்தும் வகையில் மத்திய அரசு மாட்டு இறைச்சிக்கு எதிரான சட்டத்தை கொண்டு வந்து உள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசின் ஓராண்டு சாதனையில் எந்த திட்டங்களும் கொண்டு வரப்படவில்லை. சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் முன்னேற்றம் இல்லை. குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதுடன், 81 லட்சம் இளைஞர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் உள்ளனர். அதை போக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
விரிவுபடுத்த வேண்டும்
அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை பயன்படுத்தி பா.ஜனதா தமிழகத்தில் காலூன்ற முயற்சி செய்து வருகிறது. அந்த முயற்சி எடுபடாது. தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்தான் பலருக்கு கைகொடுத்து வருகிறது.
தற்போது இந்த திட்டம் ஊராட்சிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மத்திய அரசு குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சிப்பதும் இல்லை.

Related Tags :
Next Story