தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் பின்புறம் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விரிசல்
தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் பின்புறம் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டு உள்ளது என புகார் எழுந்து உள்ளது.
சென்னை,
சென்னையில் பிரபல ஜவுளிக்கடையான சென்னை சில்க்சின் 7 மாடி கட்டிடத்தில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
17 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த பயங்கர தீவிபத்தில் கடையில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள துணிமணிகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாயின. என்றாலும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்ச்சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை. இதற்கிடையே கட்டிடத்திற்குள் அவ்வபோது தீ பிடித்து எரிந்த சம்பவம் தொடர்ந்தது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இன்று ராட்சத வாகனங்களைப் பயன்படுத்தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்றது.
இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் பின்புறம் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டு உள்ளது என புகார் எழுந்து உள்ளது.
தீ விபத்து மற்றும் இடிப்பு பணி காரணமாக அடுக்குமாடியின் மூன்றாவது மற்றும் தரைதள பகுதியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது என குடியிருப்போர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 3 நாட்களுக்கு பின்னர் வீட்டை திறந்த போது புகைமூட்டமாகவே இருந்தது என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story