சூரஜ் உறவினர்களிடம் திருநாவுக்கரசர், சீமான் நலம் விசாரித்தனர்


சூரஜ் உறவினர்களிடம் திருநாவுக்கரசர், சீமான் நலம் விசாரித்தனர்
x
தினத்தந்தி 3 Jun 2017 12:15 AM IST (Updated: 2 Jun 2017 11:29 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாட்டு இறைச்சி உண்ணும் விழா நடத்தியதற்காக மாணவர் சூரஜ் தாக்கப்பட்டார்.

சென்னை

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாட்டு இறைச்சி உண்ணும் விழா நடத்தியதற்காக மாணவர் சூரஜ் தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர், சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், நேற்று சூரஜை சந்திக்க சென்றார். ஆனால் சூரஜை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

இதையடுத்து திருநாவுக்கரசர், மாணவரின் உறவினர்களிடம் சூரஜின் உடல் நலம் குறித்து விசாரித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதேபோல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் நேற்று மருத்துவமனைக்கு சென்று மாணவரின் உடல் நலம் குறித்து அவரது உறவினர்களிடம் விசாரித்தார்.

Next Story