தமிழகம் முழுவதும் விதிமீறிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐகோர்ட்டில் மனு
தமிழகம் முழுவதும் விதிமீறிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
2007-ம் ஆண்டுக்கு பிறகு தியாகராயநகரில் விதிமீறி ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதுபோன்ற கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும அதிகாரிகள் எவ்வித நோட்டீசும் அனுப்பவில்லை. மாறாக தங்களின் சுயலாபத்திற்காக தியாகராயநகர் மட்டுமல்லாமல் சென்னை மாநகரம் முழுவதும் விதிகளை மீறி கட்டிடம் கட்ட அனுமதி அளித்துள்ளனர்.
பல கோடி ரூபாய்
நகர்ப்புற வீட்டு வசதித்துறை முதன்மை செயலாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி தர்மேந்திர பிரதாப் சிங் யாதவ் தான் இந்த விதிமீறல்கள் அனைத்திற்கும் முழுபொறுப்பேற்க வேண்டும். அரசு இடமாறுதல் விதிகளுக்கு புறம்பாக அவர் மட்டும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நகர்ப்புற வீட்டு வசதித்துறை முதன்மை செயலாளர் பதவியில் இருந்து வருகிறார்.
இதனால் அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சட்டவிரோத கட்டிடங்கள் கட்டுவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு துணைபோய் உள்ளார். இதன்மூலம் கடந்த 4 ஆண்டுகளில் அவர் பல கோடி ரூபாய் சட்ட விரோதமாக சம்பாதித்துள்ளார்.
சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்
சென்னை சில்க்ஸ் நிறுவனம் தியாகராயநகர் மட்டுமின்றி வேளச்சேரி, மதுரை, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் விதிகளுக்கு புறம்பாகவே கட்டிடங்களை கட்டி உள்ளது. இந்த விதிமீறல்களுக்கு முக்கிய காரணமான தர்மேந்திர பிரதாப் சிங் யாதவை உடனடியாக இடமாற்றம் செய்து அவரின் நியமனம் மற்றும் செயல்பாடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இந்த விதிமீறல்களுக்கு துணைபோன சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும அதிகாரிகள், மாநகராட்சி, தீயணைப்பு மற்றும் மின்வாரிய அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
2007-ம் ஆண்டுக்கு பிறகு தியாகராயநகரில் எத்தனை கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் விதிமீறல் கட்டிடங்கள் எத்தனை? என்பது குறித்து சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலர் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். தமிழகம் முழுவதும் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Tags :
Next Story