குன்னூர் அருகே மலை ரெயிலை வழிமறித்த காட்டு யானைகள் டிரைவரின் சாதுர்யத்தால் விபத்து தவிர்ப்பு
குன்னூர் அருகே மலை ரெயிலை காட்டு யானைகள் வழிமறித்தன. சாதுர்யமாக டிரைவர் செயல்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
குன்னூர்,
பலாப்பழ சீசன் தொடங்கியதால் சில வாரங்களுக்கு முன்பு 2 குட்டிகளுடன் 3 காட்டு யானைகள் குன்னூர் பகுதியில் உள்ள பர்லியார் மரப்பாலம் வழியாக ரன்னிமேடு வந்து பலா மரங்களை சேதப்படுத்தின. இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த யானைகளை வன பகுதிக்கு விரட்டினர்.
மீண்டும் அந்த யானைகள் சில நாட்களுக்கு முன்பு சிங்காரா எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்கு வந்து பலா மரங்களை நாசமாக்கின. அங்கு சென்ற வன ஊழியர்கள் யானைகளை விரட்டினர்.
ரெயிலை வழிமறித்தன
இதனால் 5 யானைகளும் நேற்று காலை ஹில்குரோவ் பகுதிக்கு வந்தன. பின்னர் அந்த யானைகள் அங்குள்ள தண்டவாளத்தில் நின்றவாறு, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வந்து கொண்டிருந்த மலை ரெயிலை வழிமறித்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு ரெயிலின் வேகத்தை குறைத்தார். யானைகள் நின்ற பகுதிக்கு 200 மீட்டர் தொலைவில் ரெயில் நிறுத்தப்பட்டது. இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது.
பின்னர் டிரைவர் ரெயில் என்ஜினில் இருந்து தொடர்ந்து ஒலி எழுப்பினார். இதையடுத்து அந்த யானைகள் தண்டவாளத்தை விட்டு வனப்பகுதிக்குள் சென்றன. சுமார் 1 மணி நேரம் தாமதமாக அந்த ரெயில் குன்னூருக்கு புறப்பட்டு சென்றது.

Related Tags :
Next Story