போலீஸ் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க வழக்கு சம்பந்தப்பட்ட வாகனங்களை அகற்றவேண்டும் கமிஷனர் உத்தரவு
சென்னையில் போலீஸ் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
சென்னையில் போலீஸ் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். போலீஸ் நிலையங்கள் முன்பு வழக்கு சம்பந்தப்பட்ட வாகனங்களை நிறுத்தி வைக்கக்கூடாது என்றும் அவர் ஆணை பிறப்பித்தார்.
அதிரடி நடவடிக்கைகள்
சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், பொதுமக்கள் நலன் கருதி அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். தினமும் ஒரு போலீஸ் நிலையத்திற்கு நேரடியாக சென்று பார்வையிடுகிறார்.
சென்னையில் பெரும்பாலான போலீஸ் நிலையங்கள் முன்பு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் போலீஸ் நிலையங்களில் சுத்தக்குறைவு காணப்படுகிறது. இதை நேரில் பார்த்த போலீஸ் கமிஷனர், சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.
அகற்ற உத்தரவு
அந்த சுற்றறிக்கையில், போலீஸ் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். வழக்கு சம்பந்தப்பட்ட வாகனங்களை போலீஸ் நிலையங்கள் முன்பு நிறுத்தி வைத்து அலங்கோலப்படுத்தக்கூடாது என்றும், அந்த வாகனங்களை தனி இடங்களை தேர்வு செய்து அங்கு நிறுத்தி வைக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வழக்குகளை விரைவாக முடித்து, குறிப்பிட்ட வாகனங்களை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் அல்லது வாகனங் களை ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கமிஷனர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆதார் அட்டை
வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களிடம், இனிமேல் ரேஷன் அட்டைகளை பறிமுதல் செய்யக்கூடாது என்றும், ஆதார் அட்டைகளைத்தான் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கமிஷனர் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கமிஷனரின் இதுபோன்ற உத்தரவுகளை, கூடுதல் கமிஷனர்கள் வயர்லெஸ் மூலமும் பேசி அறிவிப்பாக வெளியிட்டுள்ளனர். கமிஷனரின் இந்த உத்தரவை நிறைவேற்றாத இன்ஸ்பெக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

Related Tags :
Next Story