சென்னை சிட்டிமால் வணிக வளாகத்தில் தீ விபத்து; ஒரு மணிநேரம் போராடி தீயணைப்பு


சென்னை சிட்டிமால் வணிக வளாகத்தில் தீ விபத்து; ஒரு மணிநேரம் போராடி தீயணைப்பு
x
தினத்தந்தி 3 Jun 2017 5:53 PM IST (Updated: 3 Jun 2017 5:53 PM IST)
t-max-icont-min-icon

சென்னை சிட்டிமால் வணிக வளாகத்தில் நடந்த தீ விபத்து அணைக்கப்பட்டது.

சென்னை,

சென்னையில் பிரபல ஜவுளிக்கடையான சென்னை சில்க்சின் 7 மாடி கட்டிடத்தில் கடந்த புதன்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

17 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த பயங்கர தீவிபத்தில் கடையில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள துணிமணிகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாயின. என்றாலும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்ச்சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை.

கடந்த இரு நாட்களாக போராடி தீயணைக்கப்பட்டது.  அதன்பின் கட்டிடத்தினை இடிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.  இந்நிலையில், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சிட்டிமால் வணிக வளாகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்து உடனடியாக தீயணைப்பு துறையினர் 4 தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு வந்தனர்.  அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  தொடர்ச்சியாக ஒரு மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

Next Story