கட்சி இணைந்திருக்கும் என்ற எண்ணத்தில் தான் டெல்லியில் இருந்து வந்தேன் டி.டி.வி. தினகரன் பேட்டி


கட்சி இணைந்திருக்கும் என்ற எண்ணத்தில் தான் டெல்லியில் இருந்து வந்தேன் டி.டி.வி. தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 3 Jun 2017 6:31 PM IST (Updated: 3 Jun 2017 6:30 PM IST)
t-max-icont-min-icon

கட்சி இணைந்திருக்கும் என்ற எண்ணத்தில் தான் டெல்லியில் இருந்து வந்தேன் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

இரட்டை இலை சின்னத் திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதான அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஜாமீனில் விடுதலையாகி யுள்ளார்.  

டெல்லியில் இருந்து விமான மூலமாக மதியம் 1 மணி அளவில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் தினகரனின் ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் தினகரன் செய்தியார்களிடம் கூறியதாவது:

கட்சி இணைந்திருக்கும் என்ற எண்ணத்தில் தான் டெல்லியில் இருந்து வந்தேன், தற்போது அதற்கான வாய்ப்பு கூட இல்லாத சூழல் நிலவுகிறது. கட்சி இணைந்திருக்க, ஆட்சி நிலைக்க சிலரின் கருத்தை கேட்டு ஒதுங்கியிருப்பதாக கூறினேன். சசிகலாவை திங்கள் அல்லது செவ்வாய் கிழமை சந்திப்பேன். சசிகலாவை சந்தித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story