கருணாநிதியின் வைரவிழாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இணைந்துள்ளது -நாராயணசாமி பேச்சு


கருணாநிதியின் வைரவிழாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இணைந்துள்ளது -நாராயணசாமி பேச்சு
x
தினத்தந்தி 3 Jun 2017 7:55 PM IST (Updated: 3 Jun 2017 7:55 PM IST)
t-max-icont-min-icon

திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இணைந்துள்ளது என்று புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி கூறியுள்ளார்.

சென்னை,

கருணாநிதியின் வைர விழாவில் புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி பேசியதாவது:

இந்திய அரசியலில் விரைவில் மாற்றம் வந்து மதசார்பற்ற அணி உருவாகும். 75 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதும் பத்திரிக்கையாசிரியரை நான் பார்த்ததில்லை. கருணாநிதி கதை வசனம் எழுதினால் நாட்டில் பிரச்சனை இல்லை என்று அர்த்தம். மக்களை துன்புறுத்தும் ஆட்சிதான் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது.

டெல்லியில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் தமிழகம் இயங்கி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பொம்பை ஆட்சி தான் நடந்து வருகிறது.  திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இணைந்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து 14 முறை வெற்றி பெற்ற கருணாநிதியை போல் உலகத்தில் யாரும் கிடையாது. தமிழக அரசின் ரிமோட் மத்திய அரசின் கையில் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story