குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்: ‘கலைஞர்94’ ஹேஷ் டேக் தொடர்ந்து முன்னிலை தி.மு.க. தலைமை தகவல்


குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்: ‘கலைஞர்94’ ஹேஷ் டேக் தொடர்ந்து முன்னிலை தி.மு.க. தலைமை தகவல்
x
தினத்தந்தி 3 Jun 2017 11:14 PM IST (Updated: 3 Jun 2017 11:14 PM IST)
t-max-icont-min-icon

அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள், தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் என பலதரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

சென்னை,

தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94–வது பிறந்தநாள் மற்றும் சட்டமன்ற வைர விழாவினை முன்னிட்டு, #HBDKalaignar94 என்ற ஹேஷ் டேக்கில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள், தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் என பலதரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். இதனால், கடந்த 2–ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் தற்போது வரை சமூக வளைத்தளங்களில், #HBDKalaignar94 ஹேஷ் டேக் தொடர்ந்து முன்னிலை பெற்றுவருகிறது.

பல லட்சக்கணக்கானோர் இந்த ஹேஷ் டேக்கில், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தங்களுடைய பிறந்தநாள் மற்றும் சட்டமன்ற வைர விழா வாழ்த்து, அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் தி.மு.க. ஆட்சிகால சாதனைகள் குறித்த பதிவுகளை ‘ட்வீட்’ செய்து வருவதால், #HBDKalaignar94 ஹேஷ் டேக் உலகளவில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டானது. மேலும், இந்திய அளவில் முதலிடம் பிடித்து ட்ரெண்டாகி வருகிறது.

அதேபோல, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பல்லாயிரக்கணக்கானோர் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story