அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க சென்னையில் விதிமீறல் கட்டிடங்களை இடிக்க வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க சென்னையில் விதிமீறல் கட்டிடங்களை தமிழக அரசு இடிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சென்னை தியாகராயநகரில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்ததை தொடர்ந்து பாதுகாப்பு கருதி அக்கட்டிடம் இடிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்படாது என்று வீட்டு வசதித்துறை அமைச்சரும், செயலாளரும் கூறி இருக்கின்றனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
2006–ம் ஆண்டு வரை மட்டும் சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களின் எண்ணிக்கை 32 ஆயிரம் ஆகும். அதன்பின் கடந்த 10 ஆண்டுகளில் கட்டப்பட்ட கட்டிடங்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி விடும். இந்த கட்டிடங்களை சீரமைப்பதன் மூலம் தான் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்டது போன்ற அசம்பாவிதங்களை தடுக்க முடியும்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
சென்னையில் விதிமீறல் கட்டிடங்களை இடிக்க தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 24.11.2006 அன்று அளித்த தீர்ப்பில், ‘‘கடந்த கால சென்னையையும், நிகழ்கால சென்னையையும் ஒப்பிட்டு பாருங்கள். ஒட்டுமொத்த மாநகரமும் இப்போது வாழத் தகுதியற்றதாக மாறி விட்டது. மக்கள் அமைதியாக வாழட்டும். நாடு வாழட்டும். குறைந்தபட்ச கட்டுப்பாடாவது நிலவட்டும் என்று கூறியது.
அதை மனதில் கொண்டு சென்னையில் விதிமீறல்களை செய்து கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களையும் இடிப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story