கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்கும் பணி தொடங்கியது முதல்கட்டமாக குழாய்களில் கசிவு இருக்கிறதா? என ஆய்வு செய்யப்படுகிறது
சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து சோதனை அடிப்படையில் தண்ணீர் எடுக்கும் பணி தொடங்கியது.
சென்னை,
சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து சோதனை அடிப்படையில் தண்ணீர் எடுக்கும் பணி தொடங்கியது. முதல்கட்டமாக குழாய்களில் கசிவு இருக்கிறதா? என ஆய்வு செய்யப்படுகிறது.
கல்குவாரி தண்ணீர்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நேற்றைய நிலவரப்படி 285 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதனை வைத்துக்கொண்டு இம்மாதம் முழுவதும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்பதால், மாற்று ஏற்பாடாக கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சென்னையின் புறநகர் பகுதிகளான மாங்காட்டில் உள்ள 22 கல்குவாரிகள், திருநீர்மலையில் 3, பம்மல் 3, நன்மங்கலத்தில் 3 உள்பட 31 கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்த குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்தலாமா? என்று ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் மாங்காட்டை அடுத்த சிக்கராயபுரத்தை சுற்றியுள்ள 22 கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை குடிநீராக பயன்படுத்தலாம் என்று தெரியவந்தது.
சோதனை அடிப்படையில்
இந்த கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை குழாய்கள் மூலம் செம்பரம்பாக்கம் ஏரி அருகில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்வதற்காக குழாய்கள் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்துவந்தது. இந்த பணி நிறைவடைந்த நிலையில் சோதனை அடிப்படையில் தண்ணீர் எடுக்கும் பணி நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக குழாய்களில் கசிவு இருக்கிறதா? என்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்வதற்காக 22 கல்குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகில் உள்ள குடிநீர் சுத்திகரிக்கும் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்படுகிறது. இதற்காக 3.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
30 மில்லியன் லிட்டர்
சோதனை அடிப்படையில் நேற்று முதல் கல்குவாரியில் இருந்து தண்ணீர் குழாய்கள் வழியாக சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக குழாய்களில் தண்ணீர் கசிவு இருக்கிறதா? என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் இந்த பணி முடிந்த உடன் கல்குவாரிகளில் இருந்து தினசரி 30 மில்லியன் லிட்டர் வீதம் 100 நாட்களுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகிக்கப்பட உள்ளது.
இதுதவிர போரூர் ஏரியில் இருந்து 100 நாட்களுக்கு தினசரி 4 மில்லியன் லிட்டர் வீதம் குடிநீர் எடுப்பதற்கான பணிகளும் தீவிரமாக நடந்துவருகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Related Tags :
Next Story