ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவோம் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் பேட்டி
ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவோம் என்று கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. ஆகியோர் தனித்தனியாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது சீதாராம் யெச்சூரி கூறியதாவது:–
கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். டாக்டர்களிடம் அவர் உடல்நிலை குறித்து கேட்டறிந்தோம். அவருடைய உடல்நிலை நன்றாக குணமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கருணாநிதியின் பிறந்த நாள் விழா மற்றும் சட்டபேரவை வைர விழாவுக்கு வந்த தலைவர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு ஒன்றாக இணைந்து செயல்படுவோம்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில், 17 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஆலோசனை செய்திருக்கிறோம். அதில், பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசித்தோம். எனவே அனைவரும் இணைந்து எங்களுடைய வேட்பாளர் யார்? என்பதை தேர்வு செய்து அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
டி.ராஜா
டி.ராஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:–
கருணாநிதியை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தோம். அவரது உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி எங்களை பார்த்து புன்முறுவல் செய்தார். அது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கருணாநிதி நல்ல ஆரோக்கியத்துடன் செயல்பட வாழ்த்தினோம்.
பா.ஜ.க. அரசின் கொள்கைகள் மக்கள் விரோதமாகவும், மதவெறி கொள்கைகளை முன்னிலைப்படுத்தும் வகையிலும் இருக்கிறது. ஆகவே மத்திய அரசுக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து போராட வேண்டியுள்ளது. கருணாநிதி பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற ஒற்றுமை இயக்கம், மக்கள் நலன் காக்கும் இயக்கமாக உள்ளது.
பொது வேட்பாளர்
இந்தியாவை காப்பதற்கு, இந்த இயக்கம் தொடரவேண்டும் என்பது எங்கள் எண்ணம். டெல்லியில் 17 கட்சி தலைவர்களும் ஆலோசனை நடத்தி இருக்கிறோம். ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்துவதில் எங்களிடையே கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. மதச்சார்பற்ற ஜனநாயகத்தை காப்பாற்றும் ஒரு தலைவரை பொது வேட்பாளராக நிறுத்துவதே எங்கள் விருப்பம்.
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து மத்திய அரசு இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை. அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர் இந்திய அரசியல் சட்டத்தை உயர்த்தி பிடிப்பவராக இருக்க வேண்டும். மதச்சார்பற்றவராகவும் இருக்கவேண்டும்.

Related Tags :
Next Story