தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல்


தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 5 Jun 2017 4:30 AM IST (Updated: 4 Jun 2017 11:06 PM IST)
t-max-icont-min-icon

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சுட்டெரித்து வந்த கோடை வெயில் தற்போது படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கேரள உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த மாதம் 30–ந் தேதி அன்று தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இடியுடன் கூடிய...

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:–

வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் நாளை (இன்று) இடியுடன் கூடிய மழை பெய்யும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையானது ஒரு சில தினங்களில் படிப்படியாக பெய்ய தொடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பூண்டியில் 4 செ.மீ. மழையும், குறைந்த பட்சமாக திண்டிவனத்தில் 1 செ.மீ மழையும் பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story