திறப்பைவிட நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 24 அடியாக உயர்வு
தண்ணீர் திறப்பைவிட நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 24 அடியாக உயர்ந்தது.
மேட்டூர்,
கர்நாடக மாநிலத்தில் உள்ள வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றின் துணை நதியான பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் கலப்பதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதி கரித்தது.
அதாவது, கடந்த 1-ந் தேதி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,113 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அது 2-ந் தேதி 1,299 கன அடியாகவும், நேற்று முன்தினம் 1,339 கன அடியாகவும் அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,264 கனஅடியாக குறைந்தது.
நீர்மட்டம் உயர்வு
இதற்கிடையே, அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் திறப்பைவிட நீர்வரத்து அதிகமாக உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது.
இதன்படி, கடந்த 1-ந் தேதி 23.46 அடியாக இருந்த நீர் மட்டம் 2-ந் தேதி 23.65 அடியாகவும், நேற்று முன் தினம் 23.85 அடியாகவும் உயர்ந்தது. இது நேற்று 24.03 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கு மானால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காலதாமதம்
மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசனவசதி பெற்று வந்தது.
இதற்கிடையில், அணையில் உள்ள நீர்இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது கால தாமதமாகவோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை கைகொடுப்பதில்லை. இதனால் ஜூன் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலையே நிலவி வருகிறது. இதற்கு பதிலாக ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் என காலதாமதமாகவே அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
தண்ணீர் திறக்கப்படுமா?
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமெனில் அணையின் நீர்மட்டம் குறைந்தபட்சம் 80 அடியாகவும், நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாகவும் இருக்கவேண்டும்.
இந்த ஆண்டு நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 24.03 அடியாகவே உள்ளது. இதன் காரணமாக தற்போதைய சூழ்நிலையில் பருவமழை தீவிரமடைந்தால்கூட வருகிற 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கமுடியாத நிலையே காணப்படுகிறது. இதனால் டெல்டா விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

Related Tags :
Next Story