காஷ்மீரில் நடந்த தாக்குதலில் திருவண்ணாமலையை சேர்ந்த ராணுவ வீரர் மரணம்
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் திருவண்ணாமலையை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.
கண்ணமங்கலம்,
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் திருவண்ணாமலையை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். இதனையடுத்து அவரது உடல் இன்று (திங்கட் கிழமை) சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது.
ராணுவ வீரர் பலி
திருவண்ணாமலை மாவட்டம், சந்தவாசல் அருகே உள்ள தேப்பனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி சின்னபொன்னு. இவர்களுக்கு மணிவண்ணன் (வயது 24), ஆனந்த் என 2 மகன்களும், மஞ்சுளா என்ற மகளும் உள்ளனர். பி.எஸ்சி. பட்டதாரியான மணிவண்ணன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார்.
இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் ராணுவ வீரர் மணிவண்ணன் வீரமரணம் அடைந்தார்.
இது குறித்து மணிவண்ணனின் குடும்பத்தினருக்கு நேற்று முன்தினம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவத்தால் மணிவண்ணன் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
உடல் இன்று வருகிறது
மணிவண்ணன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக விடுமுறையில் சொந்த கிராமமான தேப்பனந்தலுக்கு வந்துள்ளார். அப்போது அவரது பெற்றோர் மணிவண்ணனுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்துள்ளனர். அதற்கு மணிவண்ணன் அடுத்த விடுமுறைக்கு வரும்போது பார்த்துக்கொள்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
ராணுவவீரர் மணிவண்ணனின் உடல் டெல்லியில் இருந்து இன்று (திங்கட் கிழமை) அதிகாலை சொந்த ஊருக்கு எடுத்து வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :
Next Story