ஜம்மு காஷ்மீரில் தாக்குதலில் உயிரிழந்த திருவண்ணாமலை ராணுவ வீரர் உடல் சென்னை வந்தது


ஜம்மு காஷ்மீரில் தாக்குதலில் உயிரிழந்த திருவண்ணாமலை ராணுவ வீரர் உடல் சென்னை வந்தது
x
தினத்தந்தி 5 Jun 2017 12:23 AM IST (Updated: 5 Jun 2017 12:22 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் தாக்குதலில் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் உடல் சென்னை வந்தது.

சென்னை,

காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் ராணுவ வீரர் மணிவண்ணன் வீரமரணம் அடைந்தார். இந்நிலையில்  ராணுவ வீரர் மணிவண்ணனின் உடல் டெல்லியில் இருந்து இன்று விமானத்தில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. மேஜர் மாம்கைன் தலைமையிலான ராணுவ வீரர்கள் உடலை பெற்று திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே உள்ள தேப்பனந்தல் கிராமத்திற்கு கொண்டு சென்றனர்.

Next Story