அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுடன் கூட்டணி இல்லை டாக்டர் ராமதாஸ் மீண்டும் திட்டவட்டம்
அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுடன் பா.ம.க. கூட்டணி வைப்பதே இல்லை என்று டாக்டர் ராமதாஸ் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது இணையதள முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கருணாநிதிக்கு வாழ்த்து
தி.மு.க. தலைவரும், எனது நண்பருமான கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் மற்றும் சட்டப்பேரவை நுழைவு வைர விழாவையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தேன். அந்த அறிக்கையை எனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டிருந்தேன். எனது முகநூல் பக்கத்தில் இதுதொடர்பாக பின்னூட்டம் இட்டிருந்தவர்களில் பலர் அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து கருணாநிதிக்கு வாழ்த்து கூறியதற்காக நன்றி தெரிவித்திருந்தனர்.
இன்னும் பலர் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அக்கட்சியுடன் எந்தக்காலத்திலும் கூட்டணி அமைத்துக் கொள்ளக்கூடாது என்று அன்பாக எச்சரிக்கை விட்டிருந்தனர். அந்த இளைஞர்களுக்கு விளக்கமளிப்பதற்காகத் தான் இந்த முகநூல் பதிவு ஆகும்.
தமிழகத்தின் துரதிருஷ்டம்
தலைவர்களின் பிறந்தநாள்களில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது என்பது அரசியல் நாகரிகங்களில் ஒன்றாகும். வட மாநிலங்களில் அரசியல் ரீதியாக எதிரெதிர் அணிகளில் இருப்பவர்கள் கூட, பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஒன்று கூடுவதும், அரசியல் தவிர்த்து பிற இடங்களில் நண்பர்களாக பழகுவதும் வாடிக்கையாகும்.
அத்தகைய நாகரிக கலாசாரத்தை தமிழகத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எனது விருப்பமாகும். ஆனால், எதிர் அணியில் உள்ள தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுகூட அரசியலாக்கப்படுவது தான் தமிழகத்தின் துரதிருஷ்டம் ஆகும்.
கூட்டணி இல்லை
இதன்மூலம் நமது இளைஞர்களுக்கு நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், நமது கொள்கையில் நாம் உறுதியாக இருக்கும் அதே நேரத்தில் அரசியல் நாகரிகம் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் அரசியல் நாகரிகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே அரசியல் தலைவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை நேரிலும், அறிக்கை வாயிலாகவும் தெரிவிக்கிறோம்.
இதற்கும் கூட்டணிக்கும் தொடர்பு இல்லை. அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில் மற்ற யாரையும் விட நான் தெளிவாக இருக்கிறேன். இந்த விஷயத்தில் யாருக்கும் மனத்தடுமாற்றம் தேவையில்லை. தெளிவாக இருங்கள். அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத அரசை தமிழகத்தில் அமைத்தே தீருவது என்பதில் பா.ம.க. மிக மிக மிக உறுதியாக உள்ளது.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story