எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது


எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 8 Jun 2017 1:47 AM IST (Updated: 8 Jun 2017 1:47 AM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் நாட்கள் குறித்த அறிவிப்பை சபாநாயகர் ப.தனபால் நேற்று அறிவித்தார்.

சென்னை,

இந்த நிலையில், அமைச்சரவை கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவை கூட்ட அரங்கத்தில் பிற்பகல் 3 மணிக்கு இந்த கூட்டம் நடக்கிறது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், சட்டசபை கூட்டத்தொடர் பற்றியும், பொது விவகாரங்கள் பற்றியும் ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.


Next Story