அ.தி.மு.க.அணிகள் இணைப்பு பேச்சு நடைபெறவில்லை நாடகம் ஆடுகிறார்கள் மைத்ரேயன் எம்.பி.
அ.தி.மு.க.அணிகள் இணைப்பு பேச்சு நடைபெறவில்லை நாடகம் ஆடுகிறார்கள்என ஓபிஎஸ் அணி மைத்ரேயன் எம்.பி. கூறி உள்ளார்.
சென்னை,
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி. மைத்ரேயன் கூறியதாவது:-
டி.டி.வி. தினகரனை எம்.எல்.ஏ.க்கள் சென்று பார்ப்பது அவர்களது உள்கட்சி பிரச்சினையாகும். ஆனால் கடந்த சில நாட்களாக இரு அணிகளும் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடைபெறுவதாக வெளிவரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் தான். அதில் உண்மை இல்லை.
சசிகலா, தினகரன் குடும்பத்தை நீக்கி வைத்தால்தான் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று ஏற்கனவே நாங்கள் தெளிவாக கூறி விட்டோம்.அதில் முடிவு தெரியாமல் எந்த பேச்சுவார்த்தையும் நடக்காது. பேச்சுவார்த்தைக்கு தற்போது தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.
இன்றைக்கு எடப்பாடி பழனிசாமியின் அணி மிகவும் பலவீனப்பட்டு விட்டது. சொந்த எம்.எல்.ஏ.க்களை கூட அவரால் தக்க வைக்க முடியுமா? என்ற கேள்விக்குறி ஏற்பட்டு உள்ளது.
இந்த சூழ்நிலையில் யாராக இருந்தாலும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையை ஏற்று இணைவதுதான் நல்லது. அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பொதுமக்கள் ஆதரவு மதிப்பளிக்கும் வகையில் எடப்பாடி அணியினர் வந்து இணைய வேண்டும்.
தினகரனை ஒதுக்கி வைப்பதாக எடப்பாடி பழனிசாமி அணியினர் கூறி வந்த நிலையில் அவரை இப்போதும் எம்.எல்.ஏ.க்கள் சென்று பார்த்து வருவது பற்றி நாங்கள் அப்போதே சந்தேகித்தோம். அந்த குடும்பத்தை இவர்களால் நீக்க முடியாத சூழ்நிலைதான் உள்ளது.
எனவே இப்போது அந்த அணியில் நடைபெறுவது நாடகமா? அல்லது பிளாக் மெயிலா? என்பது விரைவில் தெரிந்து விடும். ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்படுவதாக வதந்தி பரப்பப்படுகிறது. இது தொடர்பாக யார்? எப்படி? வாக்குறுதி கொடுக்க முடியும்? எனவே ஓ.பன்னீர்செல்வம் தலைமையை ஏற்று அனைவரும் இங்கு வந்து இணைவதுதான் தற்போதைய பிரச்சினைகள் அனைத்துக்கும் நிரந்தர தீர்வாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story