மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு விரைவில் தெரிவிக்கப்படும் -எடப்பாடி பழனிசாமி
மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு விரைவில் தெரிவிக்கப்படும் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். விழா முடிந்ததும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குடியரசுத்தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து தற்போது வரை முடிவு எடுக்கவில்லை.கால்நடை சந்தை கட்டுப்பாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் அறிக்கை கிடைத்த பிறகு தமிழக அரசின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும். 122 எம்எல்ஏக்கள் ஆதரவோடு தமிழக அரசு வலுவாக உள்ளது.திட்டங்கள் சிறப்பாக செயல்படவில்லை என சிலர் திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர்
நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரிக்கை வைத்தோம். மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு விரைவில் தெரிவிக்கப்படும். மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழக அரசு வலிமையாகவும். நிலையாகவும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story