தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்


தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 10 Jun 2017 1:30 AM IST (Updated: 10 Jun 2017 12:19 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கோடை காலத்தில் இருந்தது போன்று வெப்பம் இனிமேல் இருக்க வாய்ப்பு இல்லை. வெப்பம் படிப்படியாக குறைந்து விடும்.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் கோடை காலத்தில் இருந்தது போன்று வெப்பம் இனிமேல் இருக்க வாய்ப்பு இல்லை. வெப்பம் படிப்படியாக குறைந்து விடும். தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு லேசான மழை இருக்கும். சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு மேகம் மூட்டமாக காணப்படும். சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் பரமக்குடியில் அதிகபட்சமாக 3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதேபோன்று சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, இளையான்குடி, காரைக்குடி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் வால்பாறை, சின்னகளார் ஆகிய இடங்களில் தலா ஒரு மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.


Next Story