அ.தி.மு.க. அணிகள் இணைவது சாத்தியமானதுதான் முன்னாள் அமைச்சர் பாணடியராஜன் பேச்சு
திருத்தணியில் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியின் சார்பில் திருவள்ளூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
திருவள்ளூர்
திருத்தணியில் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியின் சார்பில் திருவள்ளூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் முக்கிய பிரமுகராக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் பொதுமக்கள அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் பக்கத்தில்தான் உள்ளார்கள் எனபதை நிரூபிக்கும் வகையில் கட்சி தொண்டர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். தற்போது நடக்கும் தர்மயுத்தத்தில் நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை திருவேற்காட்டில் நடக்க உள்ள செயல்வீராகள் கூட்டம் தமிழகத்தில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும். அ.தி.மு.க.வில் எந்த பிரச்சினை இருந்தாலும் அ.தி.மு.க.வினர் யாரும் இதுவரை தி.மு.க.வுக்கு செல்லவில்லை என்பதை அனைவரும் அறிய வேண்டும். நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து பேசி மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம். அ.தி.மு.க. அணிகள் இணைவது என்பது சாத்தியமானதுதான்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story