தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் மனதார ஏற்றுக்கொள்வோம் எடப்பாடி பழனிசாமி ருசிகர பேச்சு
ஆட்சிக்கு துணையாகவும், தூணாகவும் இருக்க தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் மனதார ஏற்றுக்கொள்வோம் என்று ஓநாய், நரி கதை கூறி எடப்பாடி பழனிசாமி ருசிகரமாக பேசினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது ஒரு ருசிகர கதையை கூறினார். அது வருமாறு:-
ஒத்த கருத்து
வறட்சியிலிருந்து மக்களை காப்பாற்றுவதையே தலையாய கடமையாகக் கொண்டு இந்த அரசு உழைத்து வருகிறது. எங்களுக்கு ஜெயலலிதா சொன்ன தாரக மந்திரம் “அதிகமாக பேசாதீர்கள், அதிகமாக செயல்படுங்கள், உங்கள் எண்ணம் முழுவதும் மக்கள் பணியாகவே இருக்க வேண்டும்“ என்பது தான்.
எங்களைப் பொறுத்தவரை, மக்கள் பணிதான் முக்கியம். ஜெயலலிதா வழியில் நாங்கள் ஒத்த கருத்தோடு, ஒருமித்த எண்ணத்தோடு அயராது உழைப்போம் என்று இந்த நேரத்தில் உறுதிகூற கடமைப் பட்டிருக்கிறேன். இதற்கு ஒரு கதையை கூற விரும்புகின்றேன்.
ஓநாய், நரி, புலி கூட்டணி
ஒரு காட்டில் ஓநாயும், நரியும் நண்பர்கள். அவை இரை ஒன்றும் கிடைக்காமல் அலைந்து திரிந்து கொண்டிருந்தன. அப்போது மனவிரக்தியில் தனித்து வாழ்ந்து கொண்டிருந்த ஒரு புலியோடு ஓநாயும், நரியும் கூட்டு வைத்துக்கொள்ள தீர்மானித்து பேச்சுவார்த்தை நடத்தின. “மூன்று பேரும் ஒருதாய் மக்களாக ஒற்றுமையாக இருக்க வேண்டும், எந்த இரை கிடைத்தாலும் அதை பங்கு போட்டு சாப்பிட வேண்டும்” என்று ஒப்பந்தம் செய்து கொண்டன.
நமக்கு ஒரு வலிமையான தலைவன் கிடைத்துவிட்டான் என்று ஓநாயும், நரியும் ஊளையிட்டு.. ஊளையிட்டு.. தங்கள் மகிழ்ச்சியை காடு முழுவதும் தெரிவித்தன.
சூழ்ச்சி
ஒரு நாள் புலிக்கு ஓநாய், நரி மீது சந்தேகம் வந்தது. ஒரு மானை வேட்டையாடினால் அதை எப்படி பங்கு போட்டுக் கொள்வது? என்று கேட்டது. அதற்கு ஓநாய், புலியே நீதான் எங்கள் தலைவன் அதனால் மானின் தலை உங்களுக்கு, இந்த நரி, வேகமாக ஓடக்கூடியது. அதனால் மானின் நான்கு கால்களையும் இந்த நரிக்கு கொடுக்கலாம். மீதியிருப்பது உடம்புதான். அதை நான் எடுத்துக்கொள்வேன் என்றது. ஓநாயின் சூழ்ச்சியைத் தெரிந்து கொண்ட புலி, ஓநாய் தலையில் ஓங்கி அடித்தது. ஓநாய் வலி தாங்காமல் ஊளையிட்டது.
நாட்டாண்மை தீர்ப்பு
நரியே நீ எப்படி பங்கு போடுவாய்? என்று புலி நரியிடம் கேட்டது. இந்தக் காட்டுக்கே தலைவரான சிங்கத்தை நாட்டாண்மையாக வைத்து நாம் பிரித்துக் கொள்ளலாம் என்றது நரி. மூன்று பேரும் சிங்கத்தை அணுகினார்கள். சிங்கம் மூன்றுபேரும் சொல்வதை கேட்டு, நாட்டாண்மைக்கும் ஒரு பாகம் தர வேண்டும் என்ற நிபந்தனையோடு நீங்கள் வேட்டையாடிய மானை இங்கே கொண்டு வந்து போடுங்கள் நான் பிரித்துக் காட்டுகிறேன் என்றது.
மற்ற மூன்றும் ஒன்றை ஒன்று பார்த்து திருதிருவென விழித்தபடி, இனிமேல்தான் வேட்டையாட வேண்டும் என்று கூறின. கிடைக்காத ஒன்றுக்காக இத்தனை போராட்டமா? ஆரவாரமா? புலியே இந்த விலங்குகளின் நயவஞ்சக பேச்சைக் கேட்டு நீ உன் இனத்தை விட்டு பிரிந்து வந்தது தவறு, உடனே உன் இனத்தோடு சேர்ந்து விடு என்றது. நாட்டாண்மையே தீர்ப்பு சொன்ன பிறகு புலி பதுங்குவதும், தயங்குவதும் ஏன் என்று தெரியவில்லை.
திருந்தி வந்தால் ஏற்போம்
மறைந்த ஜெயலலிதா நிர்வாகத்திறமை உடையவர். கனிவையும், கண்டிப்பையும் இரு கண்களாகக் கொண்டவர். தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் மனதார ஏற்றுக் கொள்வார். அவர் எப்படியோ அதுபோல் அவரின் பிள்ளைகளாகிய நாங்களும் நடந்து கொள்வோம்.
தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி நிரந்தரமாக நடைபெற அவருடைய பிள்ளைகளாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஆட்சிக்கு துணையாகவும், தூணாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story