சென்னை அயனாவரம் போக்குவரத்து பணிமனை கேண்டீனில் பிளாஸ்டிக் அரிசி சமைக்கப்பட்டதா?
அயனாவரம் போக்குவரத்து பணிமனை கேண்டீனில் பிளாஸ்டிக் அரிசி சமைக்கப்பட்டதா? என்பது குறித்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை,
சென்னை அயனாவரம் பகுதியில் மாநகர போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் உள்ள கேண்டீனில் இருந்து பெரம்பூர், மாதவரம் உள்ளிட்ட பணிமனைகளுக்கு உணவு தயாரித்து, வழங்கப்பட்டு வருகிறது.
நேற்று பிற்பகல் வழக்கம்போல் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் மதிய உணவு சாப்பிட கேண்டீனுக்கு சென்றனர். அப்போது சாதம் கடினமாக இருந்ததால் குழம்பு ஊற்றி பிசைய முடியவில்லை.
இதனால் பிளாஸ்டிக் அரிசியாக இருக்குமோ என்ற அச்சம் போக்குவரத்துக்கழக ஊழியர்களிடையே ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்துக்கழக ஊழியர்கள் கேண்டீனில் உணவு சமைத்தவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சமைத்தது பிளாஸ்டிக் அரிசியா? அல்லது நல்ல அரிசியா? என்பதை கேண்டீன் ஊழியர்கள் தெளிவுபடுத்தவேண்டும் என்று கூறியவாறு, கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சாதம் உருண்டை
இதற்கிடையே மதிய உணவுக்காக அங்கு சாப்பிட சென்ற போக்குவரத்துக்கழக ஊழியர்கள் அங்கு தயாரான உணவை ஒரு பந்து போல உருட்டி பஸ்சின் மீது தூக்கி எறிந்தனர்.
அப்போது ரப்பர் பந்துகளை போல எறிந்தவரின் கைக்கு அதே வேகத்தில் சாத உருண்டை திரும்பி வந்தது.
இதனால் சாப்பிட சென்றவர்களும், தங்களுக்கு சாப்பிட கொடுத்தது பிளாஸ்டிக் அரிசி தான் என்று மிகுந்த அச்சம் அடைய தொடங்கினர்.
போராட்டம்
பிளாஸ்டிக் அரிசியை சமைத்ததாகவும், பணிமனையில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் கூறி 200-க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் கேண்டீனை மூடவேண்டும் என்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்யுமாறு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை (சென்னை) நியமன அதிகாரி கதிரவன் தலைமையில் ஏ.சதாசிவம், கஸ்தூரி உள்ளிட்டோர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் அயனாவரம் போக்குவரத்துக்கழக கேண்டீனுக்கு விரைந்து வந்தனர்.
அரிசி ஆய்வு
மதிய உணவுக்காக சமைக்கப்பட்ட சாதத்தை அவர்கள் ஆய்வு செய்தனர். முதலில் அந்த சாதத்தை தண்ணீரில் போட்டு பார்த்து சோதனை செய்தனர். அப்போது தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தின் அடியில் சாதம் படிந்தது. பிளாஸ்டிக் அரிசி என்றால் தண்ணீரில் மிதக்கும். ஆகவே சமைத்தது நல்ல அரிசிதான் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் நிம்மதியடைந்தனர்.
மேலும் அந்த கேண்டீன் குடோனில் இருப்பது, பிளாஸ்டிக் அரிசியா? அல்லது நல்ல அரிசியா? என்று ஆய்வு செய்ய ஒவ்வொரு அரிசி மூட்டைகளில் இருந்தும் மாதிரிகள் எடுக்கப்பட்டன. இந்த அரிசி மாதிரிகள் ஆய்வு கூடத்துக்கு பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே அந்த கேண்டீனை தொழிற்சங்க நிர்வாகிகள் சிலரும் பார்வையிட்டனர்.
பீதி
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை தொடர்ந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் அரிசி தமிழகத்திலும் நுழைந்துவிட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி நுழைவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பிளாஸ்டிக் அரிசி பீதி சென்னையில் புயலை கிளப்பியுள்ளது.

Related Tags :
Next Story