தொண்டர்களை உற்சாகப்படுத்த பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய மந்திரி


தொண்டர்களை உற்சாகப்படுத்த பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய மந்திரி
x
தினத்தந்தி 11 Jun 2017 2:13 AM IST (Updated: 11 Jun 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க.வை வலுப்படுத்த உயர்மட்ட நிர்வாகிகளும் பூத் கமிட்டி அளவிலான பா.ஜ.க. கூட்டங்களில் கலந்து கொண்டு தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை,

சென்னை வந்த மத்திய மந்திரி நிதின்கட்கரி ஆயிரம் விளக்கு மண்டலத்துக்கு உட்பட்ட தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடு பகுதியில் உள்ள 118–ம் பகுதி பா.ஜ.க. பூத் கமிட்டிக்கு திடீரென்று சென்றார்.

அங்கிருந்த பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அவரை வரவேற்றனர். அதன்பின்பு அவர் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். பா.ஜ.க. அரசின் மக்கள் நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்லும் வகையில் செயல்பட வேண்டும் என்று தொண்டர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

அவருடன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில ஊடக பிரிவு தலைவர் பிரசாத், மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ், சென்னை கோட்ட பொறுப்பாளர் சக்ரவர்த்தி, சென்னை மாவட்ட தலைவர் தனஞ்செயன் ஆகியோர் உடன் சென்றனர்.

இந்த கூட்டம் முடிந்த பின்பு, சிந்தாதிரிபேட்டையில் குடிசை பகுதியில் வசித்து வரும் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் நாராயணன் என்பவரது வீட்டுக்கு திடீரென்று சென்ற மத்திய மந்திரி நிதின்கட்கரி அங்கு மதிய உணவு அருந்தினார்.

அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார். சிறிது நேரம் அங்கிருந்த மத்திய மந்திரி பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


Next Story