நாளை சட்டசபை கூட்டத்தொடர்: தமிழக அமைச்சரவை இன்று மீண்டும் கூடுகிறது


நாளை சட்டசபை கூட்டத்தொடர்: தமிழக அமைச்சரவை இன்று மீண்டும் கூடுகிறது
x
தினத்தந்தி 12 Jun 2017 8:00 PM GMT (Updated: 12 Jun 2017 8:00 PM GMT)

தமிழக அமைச்சரவையின் கூட்டம் கடந்த 8–ந் தேதி கூடியது. இந்த கூட்டத்தில் நிலங்களின் வழிகாட்டி மதிப்பீட்டை குறைத்து முடிவு செய்யப்பட்டது.

சென்னை,

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவை மீண்டும் கூடுகிறது.

இந்த கூட்டத்தில், சட்டசபையில் நாளை (14–ந் தேதி) தொடங்கவுள்ள, அரசு துறைகளின் மானிய கோரிக்கை தொடர்பான கூட்டத்தொடர் பற்றி விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும், போர்டு மோட்டார் நிறுவனத்தின் நில விவகாரம் தொடர்பாகவும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story