சென்னை ஐகோர்ட்டுக்கு 6 புதிய நீதிபதிகள் நியமனம் ஜனாதிபதி ஒப்புதல்


சென்னை ஐகோர்ட்டுக்கு 6 புதிய நீதிபதிகள் நியமனம் ஜனாதிபதி ஒப்புதல்
x
தினத்தந்தி 14 Jun 2017 12:30 AM IST (Updated: 13 Jun 2017 10:41 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில், தற்போது 48 நீதிபதிகள் உள்ளனர். 27 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து, இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான மூத்த நீதிபதிகள் குழு நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு 6 வக்கீல்களை நீதிபதி பதவிக்கு, அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல் தலைமையிலான மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை சுப்ரீம் கோர்ட்டும், மத்திய சட்டத்துறை அமைச்சகமும் பரிசீலித்தது. இதையடுத்து, இந்த 6 வக்கீல்களையும், ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்பதலை மத்திய சட்டத்துறை ஏற்றுக் கொண்டு, 6 வக்கீல்களையும் நீதிபதிகளாக நியமிக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது.

இதன்படி, வக்கீல்கள் எம்.தண்டபாணி, வி.பவானி சுப்ராயன், அப்துல்குத்தூஸ், ஜி.ஆர்.சாமிநாதன், ஜெகதீஸ்சந்திரா, ஆதிகேசவலு ஆகியோரை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்து உத்தரவிட்டார்.

நீதித்துறையின் மரபுபடி, இந்த 6 பேரும் நேற்று தங்களது பெயரை இந்தி மொழியில் எழுதி, கையெழுத்திட்டனர். இந்த மரபு முடிந்ததால், இவர்களை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமித்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விரைவில் உத்தரவு பிறப்பிக்க உள்ளார்.


Next Story