135 மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமருக்கு எடப்பாடி கே.பழனிசாமி கடிதம்
இலங்கை அரசால் பிடிக்கப்பட்ட 135 மீன்பிடி படகுகளை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இலங்கை அரசின் நிலைப்பாடு
கடந்த 2015-ம் ஆண்டில் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்ட 61 மீன்பிடி படகுகள், 2016-ம் ஆண்டு பிடிக்கப்பட்ட 53 மீன்பிடி படகுகள், இந்த ஆண்டு பிடிக்கப்பட்ட 21 மீன்பிடி படகுகள் என மொத்தம் 135 படகுகள் தொடர்ந்து இலங்கை அரசின் காவலில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழக மீனவர்களின் ஒரே வாழ்வாதாரமான மீன்பிடி படகுகளை கைப்பற்றிவிட்டு, அவற்றை மீண்டும் தரக்கூடாது என்ற ஒரு நிலைப்பாட்டை இலங்கை அரசு எடுத்துள்ளது. கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுவித்த போதிலும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை இலங்கை அரசு திருப்பித் தருவதில்லை.
பாதிப்படையும் அபாயம்
அந்த மீன்பிடி படகுகளும், மீன்பிடி உபகரணங்களும் புதுப்பிக்கப்பட்ட நிலையில் மீண்டும் மீனவர்களிடம் ஒப்படைப்பதற்குத் தேவையான ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உங்களுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறேன்.
அந்தப் படகுகள் அனைத்தும் ஆபத்தான நிலையில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பதையும் பலமுறை சுட்டிக் காட்டியிருக்கிறேன். மழைகாலம் வரும் நிலையில் அவை நீண்ட நாட்கள் உபயோகப்படுத்தப்படாமல் கடலிலேயே தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால், பழுது நீக்க முடியாத அளவுக்கு அவை பாதிப்படையும் அபாயமும் உள்ளது.
நம்பிக்கை அழிந்துவிட்டது
அந்தப் படகுகளை விடுவிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்தபோது எங்களுக்கு நம்பிக்கை துளிர்விட்டது. ஆனால் அதுதொடர்பாக எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதால் அந்த நம்பிக்கை துரிதமாக அழிந்துவிட்டது.
இந்த பிரச்சினையை இலங்கையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விரைவாக நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு பிடித்து வைக்கப்பட்டுள்ள 135 மீன்பிடி படகுகளையும், 11 மீனவர்களையும் உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story