சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு நீதிபதி கர்ணன் வருகிறார் என்ற தகவலை தொடர்ந்து போலீசார் குவிப்பு


சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு நீதிபதி கர்ணன் வருகிறார் என்ற தகவலை தொடர்ந்து போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 14 Jun 2017 4:00 AM IST (Updated: 14 Jun 2017 1:36 AM IST)
t-max-icont-min-icon

சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு நீதிபதி கர்ணன் வருகிறார் என்ற தகவலை தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

சென்னை,

சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு நீதிபதி கர்ணன் வருகிறார் என்ற தகவலை தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதைதொடர்ந்து அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

திடீர் பரபரப்பு

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு, சுப்ரீம் கோர்ட்டு 6 மாதம் சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து நீதிபதி கர்ணன் தலைமறைவாக இருந்து வருகிறார். நீதிபதி கர்ணன் விவகாரம் தொடர்பாக தொல்.திருமாவளவன் தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புக்கு நீதிபதி கர்ணன் வருகிறார் என்று தகவல் வெளியானது.

இதைதொடர்ந்து சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு மேற்கு வங்காள கூடுதல் டி.ஜி.பி. திரிவேதி தலைமையில் போலீசார் வந்தனர். அவர்கள், பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகளிடமும், பத்திரிகையாளர்களிடமும் நீதிபதி கர்ணன் வந்துள்ளாரா? என்று விசாரித்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதி கர்ணன் அங்கு வரவில்லை என்று தெரிந்ததும் மேற்கு வங்காள போலீசார் அங்கிருந்து வெளியேறினர்.

தமிழக போலீசார் குவிப்பு

நீதிபதி கர்ணன் வருகிறார் என்ற தகவலை தொடர்ந்து பத்திரிகையாளர் மன்றம் முன்பு ஏராளமான தமிழக போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். பத்திரிகையாளர் சந்திப்பு முடிவடைந்து அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்ற பின்பே மேற்கு வங்காள போலீசாரும், தமிழக போலீசாரும் அங்கிருந்து சென்றனர்.

தலைமறைவாக இருந்து வரும் நீதிபதி கர்ணன், மதுரை ஐகோர்ட்டு கிளை வக்கீல் பீட்டர்ரமேஷ்குமாரின் பாதுகாப்பில் இருந்து வருவதாக கூறப்பட்டது. இதனால் வக்கீல் பீட்டர் ரமேஷ்குமாரின் நடவடிக்கையை தமிழக போலீசாரின் உதவியுடன் மேற்கு வங்காள போலீசார் கண்காணித்து வந்தனர்.

கண்காணித்தனர்

நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வக்கீல் பீட்டர்ரமேஷ்குமார் வந்திருந்தார். இதனால் நீதிபதி கர்ணன் ஏதாவது ஒரு காரில் இருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

இதைதொடர்ந்து, வக்கீல் பீட்டர்ரமேஷ்குமாரின் கார் மற்றும் அவருடன் வந்திருந்தவர்களின் கார்களையும் மேற்கு வங்காள போலீசார் ரகசியமாக கண்காணித்தனர்.

Next Story