நாங்கள் களங்கமற்றவர்கள்; நேர்மையானவர்கள் - தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.


நாங்கள் களங்கமற்றவர்கள்; நேர்மையானவர்கள் - தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 14 Jun 2017 4:51 PM IST (Updated: 14 Jun 2017 4:51 PM IST)
t-max-icont-min-icon

நாங்கள் களங்கமற்றவர்கள்; நேர்மையானவர்கள் எங்கள் மீது இதுபோன்ற அழுக்கான குற்றச்சாட்டுகளை கூறாதீர்கள் என தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கூறினார்.

சென்னை

முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றிபெற எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக, தற்போது ஓபிஎஸ் அணியில் இருக்கும் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசுவது போன்ற வீடியோ காட்சிகள் ஆங்கில ஊடகங்களில் வெளியானது. இந்த விவகாரத்தில் கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு ரூ.10 கோடி கொடுக்கப்பட்டதாக சரவணன் பேசுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் இன்று சட்டசபை வளாகத்தில் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்த போது பூரண மதுவிலக்கு, 14 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவுசெய்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை மட்டுமே அளித்தோம். இதுதவிர அந்த சந்திப்பின்போது எதுவும் நடக்கவில்லை. கரன்சி பாலிடிக்ஸ்சில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அமைச்சர் செங்கேட்டையனிடம் நாங்கள் கூறிய போது, உங்களைப் பற்றி எனக்குத் தெரியும். உங்கள் கோரிக்கையை மட்டும் கூறுங்கள் என்றார்.

நாங்கள் களங்கமற்றவர்கள்; நேர்மையானவர்கள். எங்கள் மீது இதுபோன்ற அழுக்கான குற்றச்சாட்டுகளை கூறி உயிரோடு கல்லறை கட்டிவிடாதீர்கள். எந்த பண பரிவர்த்தனையிலும் ஈடுபடவில்லை.தொகுதியின் கோரிக்கைகளை நிறைவேற்றவே நாங்கள் ஆதரவு தந்தோம் குதிரைபேரம் பேசப்பட்டதாக வெளியான வீடியோ பதிவு குறித்து எம்எல்ஏ சரவணனே என்னிடம் மறுப்பு தெரிவித்தார் இவ்வாறு அவர் கூறினார்.

கால்நடை சந்தை கட்டுப்பாடு தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார்.

Next Story