எம்எல்ஏக்கள் பேரம் பேசப்பட்டது சட்டமன்றத்திற்கு அவமானம் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சட்டசபையில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. எம்எல்ஏக்கள் பேரம் பேசப்பட்டது சட்டமன்றத்திற்கு அவமானம் என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை
தமிழக சட்டசபை கூட்டம் இன்று கூடியதும் சட்டபேரவையில் இன்று பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.
வீடியோ விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் பதிலளிக்க, சபாநாயகர் வாய்ப்பளிக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.ஆனால் வீடியோ விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேச சபாநாயகர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
வீடியோ ஆதாரத்தை ஆய்வு செய்த பின்னர் பேச அனுமதி வழங்கப்படும். வீடியோ விவகாரத்தில் ஏற்கனவே ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டேன், திரும்பவும் பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் கூறினார்.
இதை தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்து திமுக,காங்கிரஸ்,ஐ.யூ.எம்,எல் கட்சிகள் வெளிநடப்பு செய்தன
பின்னர் சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
நேரமில்லா நேரத்தில் வீடியோ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினேன்.பேரம் தொடர்பாக சரவணன் எம்எல்ஏ பேசியதுபற்றி விவாதிக்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். பேரவையில் பேச அனுமதிக்க வேண்டும், இல்லையெனில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பேரவை விதிகளின் படி நிலுவையில் உள்ள வழக்கு குறித்து விவாதிக்கலாம். எம்எல்ஏக்கள் பல கோடிக்கு பேரம் பேசப்பட்டது சட்டமன்றத்திற்கு அவமானம். சம்மந்தப்பட்ட எம்எல்ஏ சரவணனும் இதுகுறித்து விளக்கம் அளிக்க முன்வரவில்லை. வீடியோ விவகாரம் குறித்து முறையிட ஆளுநரிடம் நேரம் கேட்டுள்ளோம். என கூறினார்.

Related Tags :
Next Story