அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி அவசர ஆலோசனை


அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி அவசர ஆலோசனை
x
தினத்தந்தி 15 Jun 2017 7:18 PM IST (Updated: 15 Jun 2017 7:18 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.


சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி அவரசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பெரும்பாலான அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சரை சந்தித்ததை அடுத்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், சம்பத், ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், செல்லூர் ராஜூ, உதயகுமார், கடம்பூர் ராஜூ, டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Next Story