தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்
கடலோர கர்நாடகாவில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு மழை இருக்கும் என்றும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
கடந்த மாதம் (மே) 30–ந்தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கேரளா, கடலோர கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் சில இடங்களில் மழை பெய்துள்ளது. தற்போது தெலுங்கானா பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது.
நேற்றுமுன்தினம் தெலுங்கானா முதல் குமரிக்கடல் பகுதி இடையே ராயலசீமா மற்றும் உள்தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்தநிலையில் தமிழகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:–
ஓரிரு இடங்களில் மழை
நேற்று (நேற்று முன்தினம்) தெலுங்கானா முதல் குமரிக்கடல் பகுதி இடையே ராயலசீமா மற்றும் உள்தமிழகத்தில் இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தெலுங்கானா மற்றும் ராயலசீமா பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு மழையை எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்யும். அடுத்து வரும் 4 நாட்களுக்கு கடலோர கர்நாடகாவிலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் அடுத்து வரும் 3 நாட்களுக்கும் கனமழைக்கு அதிகளவில் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–
சிவகங்கை 14 செ.மீ., ஆடுதுறை, திருபுவனத்தில் தலா 7 செ.மீ., மானாமதுரை, கும்பகோணம், ஜெயம்கொண்டத்தில் தலா 5 செ.மீ., திருப்பத்தூர், செந்துறை, திருவிடைமருதூர், அரியலூர், செட்டிக்குளத்தில் தலா 4 செ.மீ., பேச்சிப்பாறை, பரங்கிப்பேட்டை, கீரனூர், சேத்தியாத்தோப்பு ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.

Related Tags :
Next Story