‘நீட்’ தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியீடு
இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு ‘நீட்’ என்ற தேசிய தகுதி தேர்வு நடைபெற்றது.
சென்னை,
இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு ‘நீட்’ என்ற தேசிய தகுதி தேர்வு நடைபெற்றது. கடந்த மாதம் 7–ந்தேதி இந்த தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 12 லட்சம் மாணவ–மாணவிகள் எழுதினார்கள். தமிழகத்தில் 85 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள்.
தேர்வு முடிவு கடந்த 8–ந்தேதி வெளியிடப்படுவதாக இருந்தது. மதுரை ஐகோர்ட்டு உத்தரவால் தேர்வு முடிவு வெளியாவது தள்ளிப்போனது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நீட் தேர்வு முடிவு விரைவில் வெளியிட உள்ளது.
இந்த நிலையில் நீட் தேர்வின் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதில்களை சி.பி.எஸ்.இ. நிறுவனம் இணையதளத்தில் (www.cbseneet.nic.in ) வெளியிட்டுள்ளது.

Related Tags :
Next Story