விமர்சிப்பவர்களை தண்டிக்கும் அதிகாரம் கேட்பதா? தேர்தல் ஆணையம் சர்வாதிகாரியாக ஆகக்கூடாது டாக்டர் ராமதாஸ் அறிக்கை
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பற்றி விமர்சிப்பவர்களை தண்டிக்கும் அதிகாரம் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பற்றி விமர்சிப்பவர்களை தண்டிக்கும் அதிகாரம் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஐயத்துக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டிய ஆணையம் அதன் செயல்பாடுகளை யாரும் விமர்சிக்க கூடாது என்ற மனநிலைக்கு ஆளாகி இருப்பது ஜனநாயத்துக்கு ஏற்பட்ட ஆபத்து ஆகும்.
ஜனநாயகமும், விழிப்புணர்வும் அதிகரித்து வரும் நிலையில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் கூட கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன. இத்தகைய நீதிமன்றங்களுக்கு கூட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து விமர்சனம் செய்பவர்களை தண்டிக்க கூடாது என்ற கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், தம்மை விமர்சிப்பவர்களை தண்டிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் கோருவது சர்வாதிகாரம் ஆகும். இதை ஒரு போதும் ஏற்க முடியாது.
எனவே இது தொடர்பான கோரிக்கையை திரும்ப பெற்று நேர்மையான, சுதந்திரமான தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான சீர்திருத்தங்களை செய்யும்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அதில் வெற்றி பெற தேர்தல் ஆணையம் முன் வர வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story