சதுப்பு நிலங்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? ஐகோர்ட்டு கேள்வி


சதுப்பு நிலங்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 16 Jun 2017 2:45 AM IST (Updated: 15 Jun 2017 11:56 PM IST)
t-max-icont-min-icon

சதுப்பு நிலங்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னை,

நாட்டில் ஈரப்பதம் உள்ள சதுப்பு நிலம் மற்றும் வனப்பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் இதுதொடர்பாக அந்தந்த மாநில ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு தொடர வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ள சதுப்பு நிலங்கள், வனப்பகுதிகள், நீர்நிலைகளை பாதுகாக்க சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை பதிவு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘தமிழகத்தில் சதுப்பு நிலப்பகுதிகளையும் பாதுகாத்து, பராமரிக்க மத்திய, மாநில அரசுகள் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்பது குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்டு 21–ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.


Next Story