வங்கி அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் ஆலோசனை தடுத்து நிறுத்த முக்கிய அறிவுரை
சென்னையில் வங்கி வாடிக்கையாளர்களிடம் பண மோசடி நடப்பதை தடுத்து நிறுத்துவது தொடர்பாக, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று வங்கி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அறிவுரைகள் வழங்கினார்.
சென்னை,
வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கணக்குகளில் இருந்து நூதனமான முறையில் லட்சக்கணக்கில் பணத்தை எடுத்து மோசடி செய்யும் சம்பவங்கள் தற்போது சென்னையில் அதிகரித்து உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் தினமும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து கண்ணீருடன் புகார் மனுக்களை கொடுத்து செல்கிறார்கள்.
கடந்த ஆண்டு ரூ.16 கோடியும், இந்த ஆண்டு இதுவரை ரூ.7 கோடியும் என மொத்தம் ரூ.23 கோடி வரை வாடிக்கையாளர்களின் பணம் சுருட்டப்பட்டு உள்ளது. இதுபோன்ற நூதன மோசடிகளை தடுத்து நிறுத்துவது தொடர்பாக நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கி அறிவுரை வழங்கினார்.
வங்கி அதிகாரிகள்
சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகளின் உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். வாடிக்கையாளர்கள் பணத்தை எவ்வாறு இழக்கிறார்கள்? என்பது பற்றி போலீஸ் தரப்பில் எடுத்து கூறப்பட்டது.
வங்கிகள் தரப்பில் என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்? என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. வங்கி அதிகாரிகள் தரப்பில் பண மோசடியை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வங்கி அதிகாரிகள் எடுத்து கூறினர்.
துண்டு பிரசுரங்கள்
வங்கி மோசடியில் இருந்து எவ்வாறு தப்பிப்பது? என்பது பற்றி வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அனைத்து வங்கிகளும் துண்டு பிரசுரங்களை வெளியிட வேண்டும். அதுபோன்ற துண்டு பிரசுரங்களை எங்களிடம் கொடுத்தால் பொதுமக்களிடம் வினியோகிக்க தயாராக இருக்கிறோம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
மேலும் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டு தொடர்பான விவரங்கள் மோசடி நபர்களிடம் சென்று விடுகிறது என்றும், அதனை தடுப்பதற்கு வங்கிகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் எடுத்து கூறப்பட்டது.
531 புகார்கள்
கடந்த 2 ஆண்டுகளில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்களிடம் தான் அதிகளவில் மோசடி நடந்துள்ளது. அந்த வங்கி வாடிக்கையாளர்கள் 531 பேர் புகார்கள் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட வங்கி உயர் அதிகாரிகளும், வாடிக்கையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி கூறினர்.
இந்த கூட்டத்தில் போலீஸ் தரப்பில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் கணேசமூர்த்தி, துணை கமிஷனர்கள் செந்தில்குமார், லலிதா லட்சுமி, கூடுதல் துணை கமிஷனர் வெங்கடாசலபதி மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Tags :
Next Story