பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி பா.ஜனதா மகளிர் பேரணி
பூரண மதுவிலக்கை அமல்டுத்தக்கோரி பா.ஜனதா மகளிர் சார்பில் சென்னையில் பேரணி நடைபெற்றது.
சென்னை,
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து தலைமைச் செயலகம் வரை மகளிர் பேரணி நடத்தப்போவதாக தமிழக பாரதீய ஜனதா கட்சி அறிவித்தது.
அதன்படி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து நேற்று பேரணி தொடங்கியது. பேரணிக்கு தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வானதி சீனிவாசன், துணைத்தலைவர் சக்ரவர்த்தி, இளைஞர் அணி செயலாளர் சுரேஷ் கர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் அணி தலைவி ஏ.ஆர்.மகாலட்சுமி வரவேற்றார்.
பாரதீய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளரும், தேசிய பொதுச்செயலாளருமான முரளிதரராவ் பேரணியை தொடங்கி வைத்து பேசினார்.
டாஸ்மாக் நாடாகி வருகிறது
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள ஏழை மக்கள் மதுவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மதுபானகடைகளால் தமிழகம் அழிந்து வருகிறது. தமிழ்நாடு என்பது டாஸ்மாக் நாடாகி வருகிறது. தமிழகத்தை ஆட்சி செய்த தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் மது விற்பனையை ஊக்கப்படுத்தின. இதன்காரணமாக தமிழக மக்களின் வருமானம், கல்வி, குடும்பம், முதியோர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழக மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க. விரும்புகிறது. தமிழக மக்களுக்கு இப்போதைக்கு தேவை பசும்பால் தான். மதுபானம் அல்ல. தமிழகத்தில் உள்ள குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு பசும்பால் தான் தேவைப்படுகிறது. இதற்காக பா.ஜ.க. அரசு பசுவை பாதுகாக்க வலியுறுத்துகிறது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்து வருகிறது. பெண்களை பாதுகாக்க முதலில் மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும். அதற்கான தொடக்கம் தான் இந்த பேரணி ஆகும்.
இவ்வாறு முரளிதரராவ் கூறினார்.
சேலையை கிழிக்க
தொடங்கி விட்டனர்
பேரணிக்கு தலைமை தாங்கிய தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது கூறியதாவது:-
தமிழகம் பின்தங்கி இருக்க திராவிட கட்சிகள் தான் காரணம். தமிழகத்தை இனிமேல் பாவிகள் ஆண்டுவிடக்கூடாது.
திராவிட கட்சிகளின் ஆட்சியால் விவசாயிகள் தத்தளிக்கின்றனர். தி.மு.க.வினரும் மதுவிலக்கு பற்றி பேசுகின்றனர். தி.மு.க.வினர் தாங்கள் நடத்தும் சாராய ஆலைகளை மூடிவிட்டு அதன்பின்பு அதுபற்றி பேசலாம். காங்கிரஸ் கட்சியில் இதுவரை வேட்டியைத்தான் கிழித்து கொண்டிருந்தார்கள். இப்போது சேலையையும் கிழிக்க தொடங்கி விட்டார்கள்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக்கடையால் பலரது வாழ்க்கை பாழாய்போய் உள்ளது. அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் மறுவாழ்வு மையம் ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் பெண்களை பாதுகாக்க கடைசி மூச்சு உள்ளவரை டாஸ்மாக் மதுபானக்கடையை எதிர்த்து குரல் கொடுப்போம். கடைசி மதுபானக்கடை மூடப்படும் வரை போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாடை கட்டி வந்தனர்
தமிழிசை சவுந்தரராஜன் பேசிக்கொண்டிருந்த போது, மதுவினால் ஒருவர் இறந்தது போன்று பாடை கட்டி அதை பாரதீய ஜனதா கட்சியினர் தூக்கி வந்தனர். அதில், ‘திராவிட கட்சிகளின் சாராய சாம்ராஜ்யம்’ என்று எழுதப்பட்டிருந்தது. இதை பேரணி நடக்கும் இடத்தின் அருகே கொண்டு வந்த போது, இந்த ஊர்வலம் மது ஒழிப்புக்கான ஊர்வலம் மட்டுமல்ல, திராவிட கட்சிகளுக்கான இறுதி ஊர்வலம் என்று தொண்டர்கள் மத்தியில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள், ‘அறுத்தது போதும், அறுத்தது போதும், தமிழச்சி தாலியை அறுத்தது போதும்’ என்றும், ‘மக்கள் வாழ்க்கை முக்கியமா, டாஸ்மாக் வருவாய் முக்கியமா’ என்றும் கோஷமிட்டனர்.
பேரணி தலைமை செயலகம் வரை நடத்தப்படும் என்று அறிவித்த போதும், சட்டமன்ற கூட்டத்தொடர் நடப்பதாக கூறி அதுவரை பேரணி நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். இதைத்தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்துடன் பேரணி முடிவடைந்தது.
பேரணியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன், பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார், இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம், ஊடக பிரிவு தலைவர் பிரசாத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story