அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் ஜனநாயகம் என்ற நாணயத்தின் இருபக்கம்-ஸ்டாலின்


அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் ஜனநாயகம் என்ற நாணயத்தின் இருபக்கம்-ஸ்டாலின்
x
தினத்தந்தி 16 Jun 2017 7:31 PM IST (Updated: 16 Jun 2017 7:31 PM IST)
t-max-icont-min-icon

அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் ஜனநாயகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

தேர்தல் ஆணையம் விமர்சனங்களை ஏற்று சிறப்பாக செயல்பட வேண்டும். அதிகாரம் துஷ்பிரயோகங்களுக்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டும். ஐனநாயகத்தை போற்றிப் பாதுகாக்கும் உன்னத பணியில் ஆணையம் உள்ளது. தேர்தல் ஆணையம் மீது அவதூறு பரப்புகிறவர்கள் தொடர்பான சட்டத்தில், ஆணையம் திருத்தம் கோரியுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல் ஆணையத்தில் சிலர் தவறு செய்யும் போது அரசியல் கட்சிகள் விமர்சனத்துடன் நிறுத்திக்கொள்கின்றன. அது அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரம் என தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.தேர்தல் ஆணையத்தை விமர்சிப்பவர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்துவோம் என அதீத வேகம் காட்டுவது ஜனநாயகத்திற்கு அழகல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story