மதுராந்தகம் அருகே 40 ஆண்டுகளுக்கு முன்பு குளத்தில் வீசப்பட்ட அம்மன் சிலை கண்டெடுப்பு


மதுராந்தகம் அருகே 40 ஆண்டுகளுக்கு முன்பு குளத்தில் வீசப்பட்ட அம்மன் சிலை கண்டெடுப்பு
x
தினத்தந்தி 17 Jun 2017 2:30 AM IST (Updated: 17 Jun 2017 2:04 AM IST)
t-max-icont-min-icon

மதுராந்தகம் அருகே 40 ஆண்டுகளுக்கு முன்பு குளத்தில் வீசப்பட்ட அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த நேத்தபாக்கம் ஊராட்சி பகுதியில் உள்ள குளத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏராளமான பெண்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு பழமையான 3 அடி உயரம் உள்ள அம்மன் கற்சிலை கிடப்பதை கண்டுபிடித்தனர்.

அந்த சிலையை பார்த்தவுடன் பலர் சாமி வந்து ஆடினார்கள். சாமி ஆடிய சிலர் “அம்மன் சிலை ஊரைவிட்டு சென்றால் ஊருக்கு மிகப்பெரிய ஆபத்து உள்ளது” என கூறினார்கள்.

இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகனுக்கு தகவல் கொடுத்தனர்.

மேலும் மதுராந்தகம் வட்டாட்சியர் கற்பகம் தலைமையில் துணை வட்டாட்சியர் பிரகாஷ், வருவாய் ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சிலையை கைப்பற்றினார்கள். பின்பு அதனை மதுராந்தகம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

பொதுமக்களிடையே வதந்தி...

கண்டெடுக்கப்பட்ட சிலை குறித்து அப்பகுதியை சேர்ந்த முதியோர் சிலர் கூறுகையில் “40 ஆண்டுகளுக்கு முன்பு நேத்தப்பாக்கத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் மதுராந்தகம் அடுத்த வசந்தவாடியை சேர்ந்த ஒருவரிடம் இருந்து அந்த அம்மன் சிலையை வாங்கினார்.

அந்த சிலையை வாங்கிய சுப்பிரமணியன் சில நாட்களில் கை, கால்கள் அடிபட்டு இறந்ததாகவும், சிலையை கொடுத்த நபரும் இறந்து விட்டதாகவும் வதந்தி பரவியது. இதையடுத்து சுப்பிரமணியனின் மனைவி அந்த சாமி சிலையை குளத்தில் வீசியுள்ளார்.

தற்போது அந்த சிலை பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டு உள்ளது” என்றனர். 

Next Story