ரெயில்களில் பயணம் செய்வதற்கான தீபாவளி பண்டிகை முன்பதிவு இன்று தொடங்குகிறது


ரெயில்களில் பயணம் செய்வதற்கான தீபாவளி பண்டிகை முன்பதிவு இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 18 Jun 2017 4:30 AM IST (Updated: 18 Jun 2017 12:51 AM IST)
t-max-icont-min-icon

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 18-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அக்டோபர் 16-ந்தேதி ரெயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று(ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

சென்னை,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. சொந்த ஊரில் தீபாவளி கொண்டாட விரும்பும் பலரும் குறித்த நேரத்தில் செல்வதற்காக பஸ் பயணத்தை விட ரெயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.

தற்போது ரெயிலில் பயணம் செய்ய 120 நாட்கள் முன்பே முன்பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. அக்டோபர் மாதம் 18-ந்தேதி புதன்கிழமை தீபாவளி கொண்டாடப்பட இருப்பதால் கிடைக்கும் விடுமுறைக்கு ஏற்ப தீபாவளிக்கு 2 நாட்கள் முன்னதாக, அதாவது அக்டோபர் 16-ந்தேதி திங்கட்கிழமை சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் முன்பதிவு செய்யலாம். அதேபோல் அக்டோபர் 17-ந்தேதி பயணம் செய்பவர்கள் நாளையும், அக்டோபர் 18-ந்தேதி பயணம் செய்பவர்கள் 20-ந்தேதியும் முன்பதிவு செய்யலாம்.

Next Story